ஆதிதிராவிட நலத்துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகள் – மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனு

Jan 20, 2026 - 11:33
Jan 20, 2026 - 11:35
 0  2
ஆதிதிராவிட நலத்துறையினரால் இடிக்கப்பட்ட வீடுகள் – மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனு

சேலம் ஜனவரி 20-

ஆதிதிராவிட நலத்துறையின் நடவடிக்கையால் இடிக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டித் தர வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் சிபிஎம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்) தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

 வீடு இழந்த ஏழை குடும்பங்கள் – கேள்விக்குறியாகும் வாழ்வாதாரம்

பல ஆண்டுகளாக குடியிருந்து வாழ்ந்து வந்த வீடுகள், உரிய மாற்று ஏற்பாடுகள் இன்றி இடிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இன்று தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மழை, வெயில் என எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வீடு என்பது ஆடம்பரம் அல்ல; அது மனிதனின் அடிப்படை உரிமை” என பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

ஆதிதிராவிட நலத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த இடிப்பு நடவடிக்கை,மாற்று குடியிருப்பு ஏற்பாடு இல்லாமல் மறுவாழ்வு திட்டம் அறிவிக்காமல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.இது அரசின் மறுவாழ்வு கொள்கைகளுக்கு முரணானது என்றும், மனித உரிமை மீறலாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

சிபிஎம் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

இந்த அநீதிக்கு எதிராக, சிபிஎம் கட்சியினர் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக மனு அளித்தனர்.

அந்த மனுவில் முக்கிய கோரிக்கைகள்:

👉🏻இடிக்கப்பட்ட வீடுகளை உடனடியாக மீண்டும் கட்டித் தர வேண்டும்

👉🏻நிரந்தர குடியிருப்பு திட்டம் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

“ஆதிதிராவிட மக்களின் வீடுகளை இடித்து அவர்களை அனாதைகளாக்குவது வளர்ச்சி அல்ல.

வீடு இல்லாமல் எந்த சமூக நீதியும் இல்லை”

மாவட்ட நிர்வாகத்தின் பதில் எதிர்பார்ப்பு

மாவட்ட ஆட்சியர் தரப்பில்,

“மனு பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் எப்போது? எவ்வாறு? என்ற கேள்விகள் இன்னும் பதிலின்றி உள்ளன.

👉🏻மக்கள் நலன் கருதி – அரசின் உடனடி நடவடிக்கை அவசியம்

👉🏻ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வீடு என்பது உயிர் போன்றது.

👉🏻அதை இழந்தவர்களுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும்.

இல்லையெனில் இந்த விவகாரம் மக்கள் போராட்டமாக மாறும் சூழல் உருவாகி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
Prabhu Sub Editor