ஊர்க்காவல் படை வீரர் மீது ஒழுங்கு நடவடிக்கை மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவு...

​திண்டுக்கல்

Apr 25, 2026 - 15:43
Apr 25, 2026 - 16:54
 0  8
ஊர்க்காவல் படை வீரர்  மீது ஒழுங்கு நடவடிக்கை  மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவு...

தேர்தல் பாதுகாப்புப் பணியில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தில் ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் செய்த செயல் தற்போது அவருக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
​திண்டுக்கல் மாவட்டம் பழனி - பாலசமுத்திரம் பகுதியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருபவர் ராஜ்குமார். சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகப் பாலசமுத்திரம் பகுதிக்குத் துணை ராணுவப் படையினர் வருகை தந்திருந்தனர். அப்போது அங்குப் பணியில் இருந்த ராஜ்குமார், பாதுகாப்பு விதிகளைத் துச்சமாக மதித்து துணை ராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கியைப் பெற்று, அதனுடன் 'கெத்தாக' போஸ் கொடுத்துப் புகைப்படம் எடுத்துள்ளார்.
​அந்தப் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிடவே, அது பாலசமுத்திரம் மற்றும் பழனி பகுதிகளில் வேகமாகப் பரவி அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது. பாதுகாப்புப் பணியின் போது இது போன்ற ஆயுதங்களுடன் விளையாடுவதும், அதைப் புகைப்படம் எடுப்பதும் மிகக்  விதிமீறல் என்பது குறிப்பிடத்தக்கது.
​இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) பிரதீப் குமார், இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பாலசமுத்திரம் பகுதியில் துப்பாக்கியைக் கையாண்ட ஊர்க்காவல் படை வீரர் ராஜ்குமார் மற்றும் அந்த ஆயுதத்தைத் தந்த துணை ராணுவ வீரர் ஆகிய இருவரிடமும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0