வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது...

கோவை

May 25, 2026 - 15:02
 0  20

கோவை வடவள்ளி முதல் மருதமலை சாலையில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில், வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இச்சங்கத்தின் துவக்கவிழாவை முன்னிட்டு சங்கத்தின் பொருப்பாளர்கள் நியமிக்க பட்டனர். தொடர்ந்து சங்கத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து எடுத்துரைக்க பட்டது. விழாவில் கெளரவ தலைவர் ஜெகநாதன் முன்னிலையில், சங்கத்தின் நிறுவன தலைவர் சிவ தேசிகன் வேளாளர் பிள்ளை மற்றும் லேனா லட்சுமணன் பிள்ளை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது..கோவையில் வடவள்ளி திருவாளர்கள் வேளாளர் பிள்ளை அறக்கட்டளையுடன் இணைந்த வடவள்ளி வேளாளர் பிள்ளை நல சங்கம் துவக்கவிழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார். இந்த சங்கம் என்பது நீண்ட நாள் கனவு, இன்று தான் நிறைவேறி உள்ளது என்றார். வேளாளர் பிள்ளை சமூகத்தில் பின் தங்கி உள்ள குழந்தைகளுக்கு கல்வி அறக்கட்டளை மூலமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறினார். இதற்காகவே இந்த சங்கத்தை உருவாக்கி உள்ளதாக கூறினார். சமூக முன்னேற்றம் என்பது ஒன்று படுவதன் மூலமாகவே கிடைக்கும் என்பதை இச்சங்கம் அனைவருக்கும் உணர்த்தும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக லன்டன் முருகேசன் பிள்ளை, லேனா லட்சுமணன் பிள்ளை, ஓய்வு பெற்ற தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி இயக்குனர் சங்கர் பிள்ளை, யோகா கலை நிபுணர் கீதா, பேராசிரியர் செந்தில் குமார் ஆலோசகர்கள், வெள்ளிங்கிரி, தலைவர் லோகநாதன், துணைத்தலைவர் வெங்கிடு சாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0