காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் ...

சென்னை

May 25, 2026 - 13:44
May 25, 2026 - 13:48
 0  12
காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் ...

 தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்  தலைமையில் தலைமைச் செயலகத்தில், கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வினை தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், காவிரி நதிநீர் வல்லுநர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்என். ஆனந்த்,  பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,  எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், நீர்வளத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு, பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு,  சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக மூத்த வழக்கறிஞர்  ஜி. உமாபதி, காவிரி தொழில்நுட்ப குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர் பிரிவின் தலைவர்  ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0