தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் ஆபத்தினை உணராமல் தொண்டர்களின் அலட்சிய செயல்...
திருச்சி
திருச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வேட்பாளர் மனு தாக்கல் மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் செய்ய திருச்சி வந்தார். அதனை காண வந்த சில தொண்டர்கள் மற்றும் பொதுமக்களும், தங்களின் உயிரைப் பணையம் வைத்து ஆபத்தான இடங்களில் , ஆபத்தினை அறியாமல் மின்சார பெட்டிகளிலும், உயரமான கட்டிடங்களிலும் நின்று கொண்டு பிரச்சாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார்கள் .
ஆபத்தினை உணராமல் தொண்டர்களின் அலட்சிய செயல்:மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ள மின்சாரப் பெட்டிககளின் மீது ஏறி நின்று பிரச்சாரத்தை கண்டனர்.மேலும் பழைய கட்டிடங்களின் விளிம்புகள் மற்றும் பால்கனிகளில் தொண்டர்கள் நின்று கொண்டு ஆபத்தினை அறியாமல் பிரச்சாரத்தை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தால் உயிர் போகும் நிலை கூட வந்திருக்கும் பிறருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கும்.
உயிரை விட அரசியலா முக்கியம்?:ஒரு வேட்பாளரைப் பார்ப்பதற்காக மின்சாரப் பெட்டி மீது ஏறி நிற்பது எந்த விதத்தில் நியாயம்? உயிர் போனால் அதற்கு யார் பொறுப்பேற்பது?விபத்து ஏற்பட்டால் பதில் என்ன?: தேர்தல் உற்சாகத்தில் பாதுகாப்பு விதிகளை காற்றில் பறக்கவிட்டது ஏன்?
எந்த அரசியல் தலைவரும் ஒரு தொண்டனின் உயிரிழப்பை விரும்புவதில்லை. எனவே, தொண்டர்களே சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்.
வெற்றி - தோல்விகளை விட மனித உயிர் மேலானது. சிறிய மின்கசிவோ அல்லது கட்டிட சரிவோ ஏற்பட்டிருந்தால், இந்த தேர்தல் என்ற திருவிழா பெரும் துக்க நிகழ்வாக மாறியிருக்கும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீதங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0