தூங்கிக் கொண்டிருக்கும் அரக்கோணம் நகராட்சி ? பொதுமக்கள் வேதனை....
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அரக்கோணம் நகராட்சி காந்தி ரோட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக அமைக்கப்படாததால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள்குற்றம்சாட்டுகின்றனர்.இந்த கால்வாய் பகுதியில் வாகனங்கள் செல்வதற்கும், பொதுமக்கள் நடந்து செல்வதற்கும் பெரும் சிரமம் நிலவுகிறது. சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலே கால்வாயில் தவறி விழும் அபாயம் உள்ளதாகவும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மேலும், இரவு நேரங்களில் மற்றும் மழைக்காலங்களில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் கால்வாயில் விழும் அபாயம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்தை உடனடியாக ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாயை சீரமைத்து பாதுகாப்பு தடுப்புகள் அமைக்க அரக்கோணம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0