குளித்தலை ஶ்ரீ மாரியம்மன் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா:
குளித்தலை
கரூர் மாவட்டம் குளித்தலை ஶ்ரீ மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.இந்த வருடமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த மாரியம்மன் திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டும் மாபெரும் அன்னதானம் விழா ஆண்டார் வீதியில் உள்ள அருள்மிகு.தண்டாயுதபாணி திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் வந்து அன்னம் பெற்றுச் சென்றனர்.இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கிராமியம் நாராயணன், கன்சல்டிங் சந்தானம் மற்றும் சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.இந்த மாபெம் அன்னதான விழா ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், கருணாநீதி, தியானேஷ்வரன் , பூசாரி ரவி, வெங்கடேஷ்,மஹா விஷ்ணு , இன்ஜினியர் சரவணன், சுந்தரேசன்,வினோத்,கோபி, சரவணன் ஜி,செல்வராஜ், மணி, சக்தி,செந்தில், பானு, செல்வரசி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0