பூட்டிய கதவுகள் – சேவைக்காக வாரங்கள் காத்திருக்கும் மக்கள்: சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் மீது குற்றச்சாட்டு”

மதுரை

May 6, 2026 - 09:15
 0  117
பூட்டிய கதவுகள் – சேவைக்காக வாரங்கள் காத்திருக்கும் மக்கள்: சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் மீது குற்றச்சாட்டு”

மதுரை மாவட்டம் சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தின் செயல்பாடு குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அலுவலகம் செயல்பாட்டில் இருந்தாலும், பெரும்பாலும் திறக்கப்படாமல் பூட்டியே இருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, ஊராட்சி மன்ற செயலாளராக பணியாற்றும் முருகன் என்பவர் அலுவலகத்திற்கு முறையாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் முக்கியமான  சான்றிதழ்கள்   பெற பொதுமக்கள் பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அலுவலகம் எந்த நாளில் திறந்திருக்கும் என்பது கூட தெரியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
மேலும், இந்த பிரச்சினை குறித்து மேலதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி அலுவலகம் நிரந்தரமாக திறக்கப்பட்டு, பொதுச் சேவைகள் காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.                                                                                                                                                                                                                           ✍🏻 தங்கப்பாண்டி                          

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0