100% வாக்குப்பதிவை நோக்கி: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு !

திருச்சிராப்பள்ளி

Mar 23, 2026 - 12:08
Mar 23, 2026 - 12:09
 0  5
100% வாக்குப்பதிவை நோக்கி: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு !

வரவிருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ஜனநாயகக் கடமையை அனைவரும் நிறைவேற்றும் வகையில், 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மாவட்ட நிர்வாகம் தீவிர விழிப்புணர்வு பணிகளைத் தொடங்கியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
"நமது இலக்கு 100% வாக்குப்பதிவு" என்ற முழக்கத்துடன் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
 விழிப்புணர்வு செய்தி: வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை என்பதையும், விழிப்புணர்வுடன் பாதுகாப்பான மற்றும் அதிகாரமிக்க வாக்காளர்களாக உருவாக வேண்டியதன் அவசியத்தையும் இந்த முன்னெடுப்பு வலியுறுத்துகிறது.
 தேர்தல் நாள்: இந்தப் பதாகையில் குறிப்பிட்டுள்ளபடி, தேர்தல் வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ளது.  
மக்கள் ஆதரவு....
மாவட்ட நிர்வாகத்தின் இந்த ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும்
வரவேற்த்துள்ளனர்.இந்தத் தொடர் முயற்சிகளால் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, புதிய வாக்காளர்களிடையே பெரும் ஆர்வமும் ஊக்குவிப்பும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என் வாக்கு என் உரிமை என் பாரதம் என்ற அடிப்படையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வாக்கு எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற முயற்சியில் இந்த விளம்பரங்கள் விழிப்புணர்வு செய்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்பதை கூறியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் இந்த "100% வாக்குப்பதிவு" என்ற பெரும் முயற்சி எந்தளவிற்கு வெற்றி பெறும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0