106- வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை!
திருச்சிராப்பள்ளி
திருச்சியில் உலக கண் அழுத்த நோய் விழிப்புணர்வு : 106 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை!
உலக கண் அழுத்த நோய் (Glaucoma) விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள 'தி ஐ பவுண்டேஷன்' (The Eye Foundation) கண் மருத்துவமனை சார்பில்
விழிப்புணர்வு உரைநடைபெற்றது. தலைமை மருத்துவர் டாக்டர் அர்ச்சனா தெரசா அவர்கள் கண் அழுத்த நோய் குறித்தும், அதன் பாதிப்புகள் குறித்தும் உரையை ஆற்றினார்.குளுக்கோமா உலக அளவில் மக்களிடம் சரி செய்ய முடியாத பார்வை இழப்பிற்கு மிக முக்கியமான காரணமாக விளங்குகிறது .இவை பார்வையை மெதுவாக குறைய செய்யும் பெரும்பாலான மக்களுக்கு இந்த நோயால் எந்த அறிகுறியும் இருப்பதில்லை எனவே சிறிது சிறிதாக பார்வை இழப்பை ஏற்படுகிறது. எனவே பரிசோதனை மூலமே இவ்வகையான நோய்களை கண்டறிய முடியும் மேலும் அதன் பாதிப்பிற்கு ஏற்றவாறு சிகிச்சைகளை வழங்க முடியும் என்று உரையாற்றினார்.
மருத்துவ உலகின் இமாலய சாதனை
இந்த விழாவின் ஒரு பகுதியாக, மருத்துவமனையின் ஒரு முக்கியச் சாதனை குறித்துப் பகிரப்பட்டது. கண் அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த 106 வயது முதியவர் ஒருவருக்கு, தி ஐ பவுண்டேஷன் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
இந்தச் சிகிச்சைக்குப் பின் அந்த முதியவர் தற்போது தனது அன்றாடப் பணிகளைத் தானே கவனித்துக் கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளார். இதன் மூலம், 100 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இத்தகைய சிக்கலான சிகிச்சை அளித்த ஆசிய அளவிலான (இந்தியா மற்றும் சீனா) முன்னணி மருத்துவமனைகளின் பட்டியலில் திருச்சியின் 'தி ஐ பவுண்டேஷன்' இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் எச்சரிக்கை
நிகழ்வில் தலைமை மருத்துவர் டாக்டர் அர்ச்சனா தெரசா ஆற்றிய விழிப்புணர்வு உரையில்:
உலக அளவில் பார்வையின்மைக்கு முக்கிய காரணமாக கண் அழுத்த நோய் உள்ளது. 40 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களில் 3% முதல் 5% வரை இந்நோய் வர வாய்ப்புள்ளது. ஆனால், இதில் 50% மக்கள் மட்டுமே முறையாகப் பரிசோதனை செய்துகொள்கின்றனர். சர்க்கரை நோய் மற்றும் அதிக கிட்டப்பார்வை உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
இலவச முகாம் மற்றும் சலுகை
விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, மார்ச் 14 முதல் ஏப்ரல் 14 வரை ஒரு மாத காலத்திற்கு 'தி ஐ பவுண்டேஷன்' கிளைகள் அனைத்திலும் இலவச கண் அழுத்த நோய் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு 10% கட்டணச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த கண் அறுவை சிகிச்சைகள் தனியார் கட்டணம் முறையிலும் அறுவை சிகிச்சை செய்கின்றன.தமிழ்நாடு அரசு காப்பீட்டு திட்டத்திற்கு அடிபடையில் கீழ் இருக்கின்ற அனைத்து விதமான அறுவை சிகிச்சைகளையும் இலவசமாக செய்துவருக்கின்றன. ஏழை எளிய மக்களுக்கு அவர்களிடம் இருக்கும் பணத்தை வைத்தும் அல்லது இலவசமாகவும்அறுவை சிகிச்சை செய்துவருக்கின்றன என்று கூறினார்கள் கோடைகால வர இருப்பதால் கண்களை பாதுக்காக்க வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் கூறிகிறேன் கண்களை வறட்சி அடைய கூடாது லென்ஸ்கள் முறையாக சுத்தமாக பயன்படுத்த வேண்டும்
அந்த லென்களை இரவு நேரத்தில் தூங்கும்போது பயன்படுத்த கூடாது என்று கூறினார்கள்
கண்கள் பாதிப்பு உள்ளவர்களா கண்ணாடி கட்டாயம் அணிய வேண்டும்
கண்களை நோய்களை பற்றிய விழிப்புணர்வு அறிந்து இருப்பது கடமை என்பதை இந்த விழிப்புணர்வு மூலமாக தகவல் அளித்து உள்ளார்கள்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0