மதுரை:
எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக நாடகத் தினத்தை முன்னிட்டு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் மதுரை ஸ்கூல் ஆப் டிராமா நிறுவனர் உமேஷ் அவர்களால் *கூக்குரல்* என்னும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. ஆசிரியை சித்ரா வரவேற்றார். ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார். முன்னதாக தமிழ் நாடக தலைமை ஆசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் படத்திற்கு பூ தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்தான விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, சம உரிமை, சொத்துரிமை, பெண் விடுதலை, பெண் குழந்தைகளிடம் ஆண் குழந்தைகள் நடந்து கொள்ளும் முறை ஆகியவை குறித்து நாடக கருப்பொருள்கள் அமைந்தன. போக்சோ சட்டம், 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாடகம் குறித்து மாணவிகள் பைரோஸ் பானு, பாண்டி லட்சுமி மற்றும் ஆசிரியைகள் அருவகம், ராணி ஆகியோர் பேசினர். ஆசிரியை அனுசியா நன்றி கூறினார். நாடகத்தை நடிகர்கள் உமேஷ், பரமேஸ்வரன், டேனி, இம்ரான், ராஜா நடிகை சூர்யகலா, இசையமைப்பாளர் காமாட்சி ஆகியோர் நிகழ்த்தி காட்டினர்.
2025 ஆம் ஆண்டின் உலக நாடக தினத்தின் கருப்பொருள் "நாடகமும் அமைதிக்கான கலாச்சாரமும் ஆகும்" என்ற விபரம் எடுத்து கூறப்பட்டது. ஆசிரியை அனுசியா நன்றி கூறினார். நாடக நிகழ்வில் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சுகுமாறன், தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.