மதுரையில் தடையை மீறி போராடிய பாஜக நிர்வாகி குஷ்பூ கைது...

மதுரையில் தடையை மீறி போராடிய பாஜக நிர்வாகி குஷ்பூ கைது...

Jan 3, 2025 - 16:18
 0  9
மதுரையில் தடையை மீறி போராடிய பாஜக நிர்வாகி குஷ்பூ கைது...
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம் மதுரையிலிருந்து தொடங்கி சென்னை வரை நடைபெறும் எனவும் மதுரையில் தொடங்கி திண்டுக்கல் திருச்சி விருத்தாச்சலம் விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்றடைந்து அங்கு ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது
இதனையடுத்து இன்று தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது இதனையடுத்து தடையை மீறி இன்று பேரணி நடத்துவதாக கூறிய பாஜகவினர் செல்லத்தம்மன் கோவில் முன்பாக திரண்டு நின்று திமுக அரசை கண்டித்தும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
அப்போது செல்லத்தம்மன் கோவிலில் உள்ள கண்ணகி சிலைக்கு மிளகாய் பொடி அரைத்து பூசும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு சாந்த நிலையில் உள்ள கண்ணகி உக்கிர நிலையில் தட்டிக் கேட்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று நூதன போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறி  மிளகாய் வற்றலை  அம்மியில் அரைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் 
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கூறியும் கையில் சிலம்புடன் நின்றபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 
அப்போது மகளிரணியினர் திமுக அரசுக்கு எதிராகவும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டனர். அப்போது செல்லத்தம்மன் கோவில் முன்பாக வருகை தந்த பாஜக மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் பாஜக மாநில தலைவர் உமா ரதி ஆகியோர் தலைமையில்  கையில் சிலம்புடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 
இதனைத் தொடர்ந்து குஷ்பு உரையாற்றி முடித்த பின்பாக காவல்துறையினர் பாஜக மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் மகளிரணி மாநில தலைவரை கைது செய்ய முயன்றனர் அப்போது ஒருவருக்கொருவர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் குஷ்பு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கீழே தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது 
பின்னர் சிறிது நேரத்திலேயே மகளிரணி நிர்வாகி குஷ்பு மற்றும் மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ஆகியோரை கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டனர்.  பின்னர் அதே மண்டபத்திற்கு 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் அழைத்து வரப்பட்டு அங்கு உள்ள மந்தையில் அடைக்கப்பட்டது.
மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட நீதி கேட்கும் பேரணியின்போது குஷ்பு தடுமாறி கீழே விழுந்தது , ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட மண்டபத்தில் குஷ்பு மற்றும் பாஜக மகளிர் அணியினரை அடைத்து வைத்தது என அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow