மதுரை:
மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் தெருக்கூத்து நிகழ்ச்சி சுகாதாரமான உணவு விற்பனை பகுதியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மதுரை தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் விழாவில் கலந்து கொண்டு ஒருமுறை பயன்படுத்தபட்ட எண்ணெய்யை தெப்பக்குளம் பகுதி சாலையோர வியாபாரிகளிடம் பெற்று பயோ டீசலாக மாற்றும் திட்டத்தின் கீழ் எண்ணெய்யை விலை கொடுத்து வாங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் மேலும் இந்நிகழ்ச்சியில் 250 மாணவர்கள் பங்கு பெற்ற உணவு பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு பேரணியை ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.தெப்பக்குளம் பகுதியில் வணிகம் செய்யும் 75 சாலையோர உணவு வணிகர்களுக்கு துறையின் சார்பில் வணிகத்துக்கு பயன்படும் டீசர்ட்,தொப்பி, மேலுறை மற்றும் மூடிய குப்பை தொட்டிகளை வழங்கினார்.
உணவு பாதுகாப்பை சிறப்பாக கடைபிடித்த அரசு,தனியார் மற்றும் கோவிலுக்கு மத்திய அரசு வழங்கிய சான்றிதழ்கள் ஆட்சியரிடமிருந்து நிறுவன பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர். உணவு பாதுகாப்பை வலியுறுத்தும் தெருக்கூத்து நாடகம் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. அதில் செயற்கை வண்ணம் கலந்த உணவு உண்பதால் ஏற்படும் பாதிப்புகள், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் உண்டாகும் பாதிப்பு, சிறுதானிய உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியம், செறிவூட்டப்பட்ட உணவு உண்பதால் உண்டாகும் உடல் ஆரோக்கியம் மற்றும் சிறந்த உணவை லேபிள் படித்து பார்த்து எவ்வாறு தேர்வு செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இந்த விழாவில் மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், மதுரை தெற்கு காவல் இணை ஆணையர், மதுரை தெற்கு கோட்டட்சியர், மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் திரளான உணவு வணிகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் நியமன அலுவலர் மருத்துவர் வே.ஜெயராமபாண்டியன் நன்றி தெரிவித்தார்.