தமிழ்நாடு அரசு சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்...

தமிழ்நாடு அரசு சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்...

Mar 28, 2025 - 15:16
 0  15
தமிழ்நாடு அரசு சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்...
தமிழ்நாடு அரசு சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்...
தமிழ்நாடு அரசு சார்பில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்...

திண்டுக்கல்:

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கொடைக்கானலுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு அவர்கள் முன்னேற்றத்திற்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையானது மேற்பார்வையின் கீழ் கொண்டு வந்து பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை தொழில் கடன் உதவி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் பராமரிப்பு உதவி தொகை உயர்த்தப்பட்டு மாதம் ரூபாய் 2000 வழங்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்ட உதவிகள் உபகரணங்கள் உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா துறையின் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் 0-6 வயதிற்கு உட்பட்ட 32 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் ஒரு நாள் கல்வி சுற்றுலாவாக 27.03.2025 கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திண்டுக்கல் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி சுற்றுலா பயணத்தை கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். மன வளர்ச்சி குன்றியதாக  கண்டறியப்பட்டு ஆரம்ப நிலை பயிற்சிகள் பெற்று வரும் 32 குழந்தைகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் ஆகியோர் கல்வி சுற்றுலாவில் கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கொடைக்கானலில் ஏரி, பில்லர் ராக், வட்டக்கானல், கோக்கர்ஸ் வால்க், பிரையன்ட் பூங்கா, பைன் ஃபாரஸ்ட் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்குள்ள பூங்கா, பறவைகள், விலங்குகளை கண்டு குழந்தைகள் ரசித்தனர். 


இது குறித்து சுற்றுலாவில் பங்கேற்றக் குழந்தைகளின் பெற்றோர் ராஜேஸ்வரி  தெரிவித்ததாவது: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டங்களை திண்டுக்கல் மாவட்டம் நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது. தற்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் இந்த கல்வி சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கொடைக்கானலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் கொடைக்கானலில் இயற்கை அழகை பார்ப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது மனநலம் குன்றிய குழந்தைகளின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் இந்த கல்வி சுற்றுலா இருந்தது இதுபோன்ற சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

இது குறித்து சுற்றுலாவில் பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோர் கனிமொழி தெரிவித்ததாவது: 

மாற்றுத்திறனாளிகள் வெளியூர் செல்வது என்றால் மிகவும் சிரமம் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எதற்கும் அவர்கள் வெளியே செல்வது இல்லை மாற்றுத்திறனாளி குழந்தைகளை இது போன்ற சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது அவர்களுக்கும் அவர்களை பராமரித்து வரும் பெற்றோர்களுக்கும் மனதிற்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. வீட்டுக்குள் முடங்கி இருந்த குழந்தைகள் இயற்கை காட்சிகள் பறவைகள் விலங்குகள் சின்ன சின்ன பூச்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இறுக்கமான சூழ்நிலைகள் மன அழுத்தத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் இந்த சுற்றுலா மூலம் புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது சுற்றுலா செல்வதற்கான அனைத்து  ஏற்பாடுகளையும் நல்ல முறையில் செய்திருந்தனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் அவர்களின் பெற்றோர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow