பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை...
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை...
திண்டுக்கல்:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் விடுமுறை நாளில் சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் வருகை- மலை கோயிலுக்கு செல்லும் படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றி கோயில் நிர்வாகம் நடவடிக்கை.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொங்கல் தொடர் விடுமுறை என்பதாலும் அதிகளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தந்துள்ளனர். மலை அடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் திருஆவினன்குடி கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
கிரிவலப் பாதையில் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடிகள் சுமந்தும் அரோகரா கோஷத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மலைக் கோயிலுக்கு செல்லும் படிவழிப் பாதையை ஒரு வழி பாதையாக மாற்றி கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக யானை பாதை வழியாக மலைக் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் சாமி தரிசனம் முடித்து கீழே இறங்கக்கூடிய பக்தர்கள் படிப்பாதை வழியாக கீழே இறங்கி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மலைக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
What's Your Reaction?






