மக்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மற்றும்பெருங்களத்தூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் நடைபெற்றது...
மக்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரி மற்றும்பெருங்களத்தூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் நடைபெற்றது...
சென்னை:
தாம்பரம் பெருங்களத்தூரில் மக்களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சாரம் தனலட்சுமி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் மற்றும் பெருங்களத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜி.பெருமாள் முன்னிலையில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் ஜி.பெருமாள் போக்குவரத்து பிரச்சாரம் செய்த போது கூறியதாவது: வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் மறவாதீர், குடிபோதையில் வாகனங்களை ஓட்டாதீர், விழிப்பான சாலை பயணம் விபத்தை தவிர்க்கலாம், வளைவில் முந்தாதே விபத்தை தேடாதே, சாலை விதிமுறைகளை மதிப்போம் விபத்துகளை தவிர்ப்போம், வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் வளைவில் முந்த வேண்டாம் என எடுத்துரைத்தார். தனலட்சுமி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை வைத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
What's Your Reaction?






