அகில இந்திய BSNL-DOT  ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக 4-வது கிளை மாநாடு...

அகில இந்திய BSNL-DOT  ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக 4-வது கிளை மாநாடு...

Jan 29, 2025 - 16:21
 0  9
அகில இந்திய BSNL-DOT  ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக 4-வது கிளை மாநாடு...
அகில இந்திய BSNL-DOT  ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக 4-வது கிளை மாநாடு...

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் அகில இந்திய BSNL-DOT  ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக 4-வது கிளை மாநாடு, புதிய நிர்வாகிகள் தேர்வு.

திண்டுக்கல்லில் அகில இந்திய BSNL-DOT  ஓய்வூதியர் சங்கம் திண்டுக்கல் கிளை சார்பாக 4-வது கிளை மாநாடு, புதிய நிர்வாகிகள் தேர்வு  நிகழ்ச்சி திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக அருகில் உள்ள தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க கட்டிடத்தில்  நடைபெற்றது .AIBDPA  மாநில அமைப்புச் செயலாளர் சுந்தரராஜன் சங்க கொடியை ஏற்றி வைத்து திண்டுக்கல் கிளை நான்காவது மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு  முனைவர்  A.சுசிலாமேரி தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். கிளை துணைச்செயலாளர் S.சுப்பிரமணியன் அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலாளர் J.ஜோதிநாதன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஜோசப் ராஜ் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

 AIBDPA மாநில துணைச் செயலாளர் S.ஜான் போர்ஜியா, மதுரை மாவட்ட AIBDPA செயலாளர் C.செல்வின் சத்யராஜ், மதுரை BSNLEU செயலர் தோழர் ரிச்சர்ட் ,BSNLEU திண்டுக்கல் செயலாளர் R.அய்யனார்சாமி ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். AIBDPA திண்டுக்கல் கிளையில் 70 வயதை கடந்த உறுப்பினர்களை கௌரவிக்கப்பட்டனர். AIBDPA மாநிலச் செயலாளர் R.ராஜசேகர் AGM சங்க கோட்பாடுகள் பற்றியும், இன்றைய ஓய்வூதியர் நிலைப்பாடுகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். AIBDPA திண்டுக்கல் கிளையின் புதிய நிர்வாகிகளை மாவட்ட செயலாளர் C.செல்வின் சத்யராஜ் தேர்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் செயல்பாட்டறிக்கை, வரவு -செலவுகள், அமைப்பு நிலை, புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத்தலைவராக  ஆ. சுசிலா மேரி, கிளை துணைத் தலைவராக  S.ஜான் போர்ஜியா, செயலராக  J. ஜோதிநாதன், பொருளாளராக ஜோசப்ராஜ்  ஆகியோர்  தேர்வு செய்யப்பட்டனர்.

துணைத் தலைவர்கள் D ஜான் சேவியர், K.கனகராஜ், கிளை துணைச் செயலாளர்கள் A.ராயப்பன், U. ஞானப்பிரகாசம், துணை பொருளாளர் C .ராஜகோபால், அமைப்புச் செயலாளர்கள் K.யோகானந்தம் G.சார்லஸ் மென்டோன்சா, கிளை துணைச் செயலாளர்கள் L.நேவீஸ், முத்துலட்சுமி மனோகரன், V.தங்கராஜ், J.அருளப்பன் ஆகியோர் நிர்வாகக் குழுவில் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் கிளை பொருளாளர் S.ஜோசப்ராஜ் நன்றி உரையாற்றினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow