மெட்ரோ லயன்ஸ் சங்கம் மற்றும் நாகல்நகர் கிளை நூலகம் சார்பில் விருது வழங்கும் விழா...
மெட்ரோ லயன்ஸ் சங்கம் மற்றும் நாகல்நகர் கிளை நூலகம் சார்பில் விருது வழங்கும் விழா...

திண்டுக்கல்:
தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கத்தின் மாநில செயலாளரும், சமூக ஆர்வலருமான A.ஜெயசீலனுக்கு "சமூக சேவகர் விருது"
திண்டுக்கல் நாகல்நகர் கிளை நூலகத்தில் மெட்ரோ லயன்ஸ் சங்கம் மற்றும் நாகல்நகர் கிளை நூலகம் சார்பாக விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மெட்ரோ சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கத்தின் மாநில செயலாளரும், சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களின் சமுதாய சேவையையும், சமூக பணியையும் கெளரவிக்கும் விதமாக அவருக்கு சந்தன மாலை அணிவித்து மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் சார்பாக "சமூக சேவகர் விருது" வழங்கி பாராட்டினார்கள். கிளை நூலகர் பாபு மற்றும் பொதுமக்கள், வாசகர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் மெட்ரோ லயன்ஸ் சங்க செயலாளர் சுகுமார் இனிப்பு வழங்கி நன்றி உரையாற்றினார்.
What's Your Reaction?






