தமிழக வெற்றி கழகம் சார்பில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...
தமிழக வெற்றி கழகம் சார்பில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் தளபதி விஜய் வழிகாட்டுதலின்படி பொதுச்செயலாளர் ஆனந்த் உத்தரவின் பேரில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் தர்மா தலைமையில் பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு மாநகர தலைவர் சை.சையது அசாருதீன் சார்பாக சுமார் 300 க்கும் மேற்பட்டோருக்கு மாபெரும்
பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ்த்தாய் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
திண்டுக்கல் மேற்கு மாநகர செயலாளர் சத்தீஸ்குமார் வரவேற்புரை வழங்கினார். அதனைத். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் உறுதிமொழி நடைபெற்றது.பின்னர் பொதுமக்களுக்கு மாநகர தலைமை கழக நிர்வாகிகள் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாநகர செயலாளர் சத்தீஸ்குமார், மாநகர பொருளாளர் காதர்மீரான், வார்டு தலைவர்கள் சேவியர், கனேசன், கிளை தலைவர்கள் யாக்கோப்,சின்னவர், செந்தில், அடியனூத்து ரிஜ்வான், மணிகண்டன், மோகன், முத்துராஜ், டோனி, ஜான்சன், சங்கீதா கணேசன், முத்துலெட்சுமி, ஹரி, பஞ்சவர்ணம், ஐயப்பன் நிக்கத்சதாம் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆகியோர் ஏற்பாட்டில் சில்வர் பொங்கல் பானை, அரிசி டப்பு, பிளாஸ்டிக் பொருட்கள், சேலை பொங்கல் தொகுப்பு பொருட்கள் (பச்சரிசி, நெய், மண்டவெல்லம், கிஸ்மிஸ்முந்திரி, பாசிப்பருப்பு, சில்வர் தட்டு, சில்வர் டம்ளர்,குடம் கல்வி உபகரணங்கள், அரிசி, கரும்பு, வாளி மற்றும் குவளை ஆகியவை வழங்கப்பட்டது.
இதில் மாநகர தலைமை நிர்வாகிகள் மாநகர இ.செயலாளர் அஜ்மல்கான்,மாநகர து.தலைவர் அண்ணாத்துரை,அடியனூத்து கிளை தலைவர் ரகுமணிகண்டன்,பிரீத்தம் திண்டுக்கல் அஜித், வினித், N.S.நகர் கார்த்திக் ,RBG.கோபால் மற்றும் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சி நிறைவாக கழகத்தின் கொள்கை மற்றும் கொடி பாடலுடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் மேற்கு மாநகர துணை செயலாளர் கௌதம் சிறப்பாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு மாநகர பொருளாளர் காதர்மீரான் நன்றி உரையாற்றினார்.
What's Your Reaction?






