மதுரை:
பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய முதல் ஜல்லிக்கட்டு போட்டியான அவனியாபுரத்தில் காலை 6.30 மணிக்கு ஜல்லிகட்டு போட்டியானது தொடங்கியது போட்டியில் 1100 காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
போட்டியில் கலந்துகொள்ள கூடிய காளைகளின் உரிமையாளர்கள் அதற்கான QR கோடுடன் கூடிய அனுமதிசீட்டுடன் ஒரே நபர் மட்டுமே வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் எனவும், போட்டியை முன்னிட்டு காளை வெளியேறகூடிய வாடிவாசல் பகுதிக்கு முன்பாக காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பாதுகாப்பு கருதி தென்னை நார்கள் பரப்பபட்டுள்ளன.
இந்த முறை புதிய நடைமுறையாக காலை 5 மணி முதல் ஆன்லைன் அனுமதி சீட்டு வரிசையின் அடிப்படையில் ஒவ்வொரு காளைகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உயரம், வயது, மற்றும் பற்கள் உள்ளிட்டவைகளை கால்நடை மண்டல இணை இயக்குனர் சுப்பையன் மற்றும் உதவி இயக்குனர் ஜோசப் அய்யாதுரை தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.