மதுரை:
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 50 ஆண்டுகால திரையுலக பயணம் ரஜினியின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மும்மத வழிபாடு.
ரஜினி உடல்நிலை சரியில்லாமல் இருந்த பொழுது மதுரை மீனாட்சி அம்மனின் வெள்ளி சிலையை மீனாட்சி அம்மன் காலடியில் வைத்து பூஜை செய்து அவருக்கு வழங்க வேண்டும் எனவும், முக்குறுணி விநாயகருக்கு மெகா சைஸ் கொழுக்கட்டை படைத்து சிறப்பு பூஜை செய்வதாகவும், வன்னிமர விநாயகருக்கு 171 தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் வைத்திருந்தோம் அதற்காக கர்நாடக ரஜினி மன்ற மாநில தலைவரும் ரஜினிகாந்தின் அண்ணன் மருமகனுமான சந்திரகாந்தை அழைத்து வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி ரஜினியின் மனைவியிடம் சென்னையில் பிரசாதத்தை கொடுக்க இருக்கிறோம்.
இந்நிகழ்வில் ரஜினி மன்ற பிரமுகர் பால நமசிவாயன் மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற துணைச் செயலாளர் P.அழகர் செல்லூர் எம்.எம்.முத்துப்பாண்டியன் திருப்பரங்குன்றம் நகரச் செயலாளர் கோல்டன்.சரவணன் அவனியாபுரம் ரஜினி பாலா தூத்துக்குடி மாவட்டம் விஜய் சாம்ஸன் ஆகியோர் ஏற்பாட்டில் கர்நாடக மாநில ரஜினி மன்ற தலைவர் சந்திரகாந்த் தலைமையில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி குமரவேல் மத்திய சென்னை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர் சூர்யா மதுரை மாவட்ட ரஜினி மன்ற பொறுப்பாளர்கள் ஜாபர் பால.தம்புராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.