மதுரை:
கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் வழிகாட்டுதலின்படி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் முன்னிட்டு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பசுமலையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி பெண்களுக்கு வேஷ்டி, சேலை, உணவு, நிதி உதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மகேஸ்வரி ராஜன் செல்லப்பா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் சசிகலா வேல்முருகன், சந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சண்முகப்பிரியா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜெயராமச்சந்திரன், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மணிகண்டன், வட்டக் கழகச் செயலாளர்கள் பொன்முருகன், செல்வம், பாலமுருகன் மற்றும் பிரசன்னா உட்பட பலர் கலந்து கொண்டனர்
ராஜன் செல்லப்பா பேசும் பொழுது
புரட்சித்தலைவி அம்மாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எடப்பாடியாரின் நல் வழிகாட்டுதலின்படி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழகத்தின் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
எத்தனை நிகழ்ச்சிகளும் நாங்கள் நடத்தினாலும் மாற்றுத்
திறனாளிகளுக்கு நடைபெறும் இந்த விழா தான் எங்களுக்கு மன மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகளுக்கும், பார்வையற்றோர் சங்க நிர்வாகிகளுக்கும் எங்களது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது உலக மகளிர் தினத்தை கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது இதனைத் தொடர்ந்து தற்பொழுது 300 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் மீது அக்கறை கொண்ட அரசாக அதிமுக அரசு இருந்து ,அவர்களுக்கு வேலைவாய்ப்பு முதல் அத்தனை திட்டங்களை சிறப்பாக செய்து கொடுத்து மாற்றுதிறனாளிகளுக்கு உற்றத் துணையாக நாங்கள் இருந்தோம். மதுரை மேலவாசல் பகுதியில் அம்மா உணவகம் கடந்த சில நாட்களாக மூடப்பட்டுள்ளது, அம்மாவின் திட்டங்களை எல்லாம் எடப்பாடியார் காலங்கள் வரை சிறப்பாக செய்யப்பட்டது. ஆனால் இன்றைக்கு அம்மா அரசு திட்டங்கள் எல்லாம் ஸ்டாலின் அரசு முடக்கப்பட்டு வருகிறது, அம்மா அரசு கொண்டுவந்து திட்டங்களை முடக்கினால் அவர்களுக்குத்தான் கேடு.
அம்மா மருந்தகத்தின் பெயரை கூட மாற்றி உள்ளனர் இதெல்லாம் மக்களுக்கு நன்றாக தெரிந்து விட்டது, இது ஒரு விளம்பர அரசாக உள்ளது. திமுக அரசு மூன்று திட்டங்களைத் தான் சாதனையாக கூறுகிறது அந்த திட்டங்களும் ஓட்டை விழுந்து விட்டது, இன்றைக்கு மக்களைப் பற்றி கவலைப்படாமல் தனி மனிதனைப் பற்றி திமுக அரசு சிந்திக்கிறது, விளம்பரத்தில் திட்டங்களை கூறுகிறார்கள் ஆனால் அதை செயல்படுத்தவில்லை இந்த ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது.
அம்மா ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எல்லாம் திமுக அரசு மூடிவிட்டனர், திமுக ஆட்சியால் மூடப்பட்ட திட்டங்களை 2026 ஆண்டில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார் அப்போது திட்டங்களை மீண்டும் மக்களுக்கு வழங்குவார்.
பொதுவாக கட்சிகளில் உட்பூசல் இருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டங்களில் கருத்து பரிமாற்றம் நடைபெறும் அந்த கருத்து பரிமாற்றம் என்பது அந்த அரங்கத்திற்குள் இருக்கும் வெளியே சென்றவுடன் அதை நாங்கள் மறந்து விடுவோம். ஆனால் திமுக எடுத்துக் கொண்டால் உட்கட்சி பூசல் என்பது அரங்கின் வெளியே போய் கொலை சம்பவத்தில் தான் முடிந்துள்ளது சென்னை முதல் கன்னியாகுமரி இந்த நிலை தான் நடந்து உள்ளது..ஆனால் அதிமுகவில் சிறிய, சிறிய பிரச்சனை இருக்கும் அது சரியாகிவிடும் என கூறினார்.