ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக நல்லோசை திட்டம்...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்காக நல்லோசை திட்டம்...

Mar 10, 2025 - 14:44
 0  6
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விடுதிகளில் தங்கி பயிலும்  மாணவர்களுக்காக நல்லோசை திட்டம்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விடுதிகளில் தங்கி பயிலும்  மாணவர்களுக்காக நல்லோசை திட்டம்...

திருச்சி:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் தழிழகம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தங்கி பயிலும் கல்லுாரி மாணவர்களின் கனவுகளைப் பற்றி தெரிந்து கொண்டுஅவர்களின் கனவை அடைவதற்கான வழிவகைகளை செய்வதற்காக நல்லோசை என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கல்லுாரி விடுதிகளில் உள்ள மாணவர்களின் செயல்பாடுகளை கண்டறிந்து அவா்களை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல இத்திட்டம் உருவாக்கப்பட்டது.

இதனை  செயல்படுத்தும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லுாரி விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு "நல்லோசை- கதைப்போமா" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 200 மாணவர்கள் கலந்துகொண்டனர்.  இந்நிகழ்ச்சியானது ஆதிதிராவிடர் நல ஆணையர்  த.ஆனந்த், தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பமாக வரவேற்புரை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இரா சௌந்தர்யா, வழங்கினார். அதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி  மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், நிகழ்ச்சியில் பங்கு பெற்று மாணவர்கள் அவர்கள் கனவுகளில் வெற்றியடைய வாழ்த்திவிட்டு மாணவர்களிடம் தான் கடந்து வந்த பாதைகளை குறித்து பேசினார்.

 மேலும் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பேசியது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இந்நிகழ்வில் இருந்து மாணவர்கள் அவர்கள் கனவு என்ன என்பதையும் அதை அடைவதற்கான வழிகளையும் அங்கே வந்திருந்த மனித புத்தகங்களுடன் உரையாடி தெரிந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் என்ன செய்தால் தங்கள் வாழ்வில் வெற்றி அடையலாம் என்பதை தெரிந்து கொண்டனர். மேலும் தாங்கள் தேர்வு செய்த கனவு தொடர்பான செயல்முறை திட்டங்கள், தினசரி பயிற்சி மற்றும் வகுப்புகள் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவர்.இந்நிகழ்ச்சியானது தங்கள் வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow