சுந்தரம் பைனான்ஸ் நடத்திய டிராக்டர்களுக்கான அழகு போட்டி...
சுந்தரம் பைனான்ஸ் நடத்திய டிராக்டர்களுக்கான அழகு போட்டி...

மதுரை:
மதுரை அருகே வாடிப்பட்டியில் சுந்தரம் பைனான்ஸ் நடத்திய டிராக்டர்களுக்கான புதுமையான பொங்கல் அழகு போட்டி.
மதுரை, வாடிப்பட்டி, இந்தியாவில் அதிகம் மதிக்கப்படும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுள் (NBFC) முதன்மை வகிக்கும் சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க முதன்மை பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி வர்த்தக வாகனங்களுக்கான 2025 பொங்கல் அழகு போட்டியை மதுரை அருகே உள்ள வாடிப்பட்டியில் இன்று சிறப்பாக நடத்தியது. ஆட்டோமோட்டிவ் வாகனங்களுக்கான கடன் வழங்கல், பொது காப்பீடு, வீட்டுக் கடன்கள் மற்றும் சொத்து மேலாண்மை ஆகிய பிரிவுகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், வாடிக்கையாளர் நல்லுறவை வலுப்படுத்துவதற்கான இந்த புதுமையான போட்டியின் வெற்றியாளர்களை இன்று அறிவித்தது. மிக நன்றாக பராமரிக்கப்படுகிற, தூய்மையான மற்றும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட டிராக்டரை தேர்வு செய்து கவுரவிக்கிற போட்டியாக இது நடத்தப்பட்டது.
சுந்தரம் சங்கமம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் ஒரு அங்கமான டிராக்டர்களுக்கான அழகு போட்டியில் 16 டிராக்டர்கள் பங்கேற்றன. மூன்று நடுவர்கள் இந்த டிராக்டர்களை மதிப்பாய்வு செய்து அவைகளுள் முதன்மையான மூன்று டிராக்டர்களை தேர்வு செய்தனர். சிறப்பாக பராமரிக்கப்பட்ட, தூய்மையான மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட இந்த டிராக்டர்களின் உரிமையாளர்களுக்கு சுந்தரம் பைனான்ஸ் வழங்கிய பரிசுகள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களுள் பெரும்பான்மையானோர் விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது சுந்தரம் பைனான்ஸ்-ன் டிராக்டர்-க்கான நிதியுதவி நடைமுறை குறித்தும் மற்றும் முக்கியமான காமதேனு செயல்திட்டம் குறித்து நிறுவன அதிகாரிகள் விளக்கிக் கூறினர்.வாடிப்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர், BPCL நிறுவனத்தின் அதிகாரி மற்றும் சுந்தரம் பைனான்ஸ்-ன் மண்டல தலைவர் திரு. ஜீவன் ஆகிய மூவராலும் தேர்வு செய்யப்பட்ட டிராக்டர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து தெளிவாக விளக்கமளித்த காவல்துறை உதவி ஆய்வாளர், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குமாறு நிகழ்வில் பங்கேற்றவர்களைக் கேட்டுக் கொண்டார்.
மகிழ்ச்சியும், உற்சாகமும் நிறைந்த சூழலில் வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடி நல்லுறவை வளர்ப்பதற்காக பொங்கலையொட்டி இந்நிகழ்வு நடத்தப்பட்டது. அத்துடன், கேபின் அமைவிடம் உட்பட தங்களது வாகனங்களை பாதுகாப்புடனும், தூய்மையாகவும் உயர்தரநிலைகளில் பராமரிக்கிற டிராக்டர் உரிமையாளர்களை அங்கீகரித்து கவுரவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும். தங்களது டிராக்டர்களை அழகாக அலங்கரித்து தனித்துவ அடையாளத்தோடு போட்டியில் விவசாயிகள் கலந்து கொண்டது இந்நிகழ்வின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும். ஜனவரி 1ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கடைபிடிக்கப்படும் “தேசிய சாலை பாதுகாப்பு மாதம்” 2025 நிகழ்வையொட்டி தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு அமைவிடங்களிலும் “சுந்தரம் சங்கமம்” நிகழ்வு நடத்தப்படுகிறது.
.
What's Your Reaction?






