ரோட்டரி சங்கம் , மற்றும் திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளி இணைந்து கொண்டாடிய பொங்கல் விழா.
ரோட்டரி-சங்கம்-மற்றும்-திண்டுக்கல்-லக்சர்-வேர்ல்ட்-பள்ளி-இணைந்து-கொண்டாடிய-பொங்கல்-விழா

திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் , மற்றும் திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளி இணைந்து தமிழர் திருநாள் பொங்கல் விழா.
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் , மற்றும் திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளி இணைந்து தமிழர் திருநாள் கொண்டாட்ட பொங்கலோ பொங்கல் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளியின் உள் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருஷோத்தமன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளியின் தாளாளர் Rtn.G. சுவாமிநாதன், திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.இந்நிகழ்ச்சியின் போது விவசாயத்தின் மதிப்பையும் , விவசாயிகளின் ஆற்றலையும் பெருமைப்படுத்தும் விதமாக பொங்கல் விழாவில் திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளி மாணவ, மாணவியர்களின் கிராமிய கலை நிகழ்ச்சிகளான கோலாட்டம், கும்மியாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், பறையாட்டம்,மல்லர்கம்பம், உறியடித்தல்,கோலமிடுதல், ஆகிய தமிழர்களின் பாரம்பரிய கலை உணர்த்தும் விதமாக சிறப்பாக அனைத்து கிராமிய கலை நடனம் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அசத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் துணை ஆளுநர் Rtn.M. செல்வகனி , Rtn.செந்தில்குமார், Rtn.ரமேஷ்பட்டேல், Rtn. மனோகரன் ,Rtn.ராஜய்யா, Rtn.குமரப்பன், Rtn.சுப்புராஜ் , Rtn. மாணிக்கம் உட்பட திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள், திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளியின் முதல்வர் Rtn.H.ஹெலன் பொன்ராஜ் நன்றி கூறினார்.
What's Your Reaction?






