சரித்திர பதிவேடு குற்றவாளி கனகராஜ் கைது...!!
சரித்திர பதிவேடு குற்றவாளி கனகராஜ் கைது...!!

மதுரை:
சென்னை சூளைமேட்டை சேர்ந்த கனகு என்ற கனகராஜ், துப்பாக்கி முனையில் மதுரையில் சுற்றி வளைப்பு. சென்னையிலிருந்து சென்ற சிறப்பு காவல் படை, மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த கனகராஜை சுற்றி வளைத்தது.
கைது செய்யப்பட்டுள்ள கனகராஜ் மீது எண்ணூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மூன்று கொலை வழக்குகளும் பல்வேறு குற்ற வழக்குகளும் உள்ளன. கனகராஜை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள கனகராஜை காவல் துறையினர் என்கவுண்ட்டர் செய்து விடுவார்கள் என்று அவரது மனைவி மேகலா உள்ளிட்டோர் புகார்.
What's Your Reaction?






