பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி

Jan 29, 2025 - 17:01
 0  4
பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் - நடிகர் விஜய் சேதுபதி
மதுரை:
மதுரை தமுக்கம் மைதானத்தில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மையம் மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில்  திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மையத்தினை திறந்து வைத்தார்.
பின்னர் மேடையில் பேசுகையில்,"பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.தமிழில் இருந்தால் பார்த்து புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.ஏதாவது பிரச்சினை வரும்போது தான் என்ன என்று தெரிந்து கொள்கிறோம்.அதுபற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரிகின்ற மொழியில் இருந்தால் அறிவதற்கு தெளிவாக இருக்கும்.

இல்லையென்றால் இன்னொருவரை சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் ஏற்படும். கஷ்டபட்டு வரி செலுத்துபவர்களுக்கு ஏதேனும் நன்மைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.தமிழ்த் தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சி தொடங்கியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow