புதிதாக அமைக்கப்பட்ட முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்...

புதிதாக அமைக்கப்பட்ட முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்...

Mar 5, 2025 - 12:40
 0  2
புதிதாக அமைக்கப்பட்ட முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் உதயநிதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்...
மதுரை:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே புதிதாக அமைக்கப்பட்ட முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்தை துணை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் 10 சட்டமன்ற தொகுதிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதலமைச்சர் சிறுவிளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்து சட்டமன்ற தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டது.

இந்த அரங்கம் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் ஒன்றியம் சின்ன இலந்தைக்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டது. அந்த அரங்கத்தினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி குத்து விளக்கேற்றி அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அரசு அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow