மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் செய்தியாளர் சந்திப்பு...

மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் செய்தியாளர் சந்திப்பு...

Jan 29, 2025 - 16:48
 0  8
மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் செய்தியாளர் சந்திப்பு...

மதுரை:

கடவுசீட்டு விண்ணப்பதாரர்கள் தட்கால் முறையில் கடவுசீட்டு விண்ணப்பம் செய்யும் பொழுது கவனமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை படித்து விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் இதனால் தேவையில்லாத கால தாமதத்தையும், அதிகமான கட்டணத்தையும் தவிர்க்க முடியும் என மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், அவர்கள் கூறியதாவது மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகத்தின் கீழ் மதுரை திருநெல்வேலி என இரண்டு கடவுசீட்டு சேவை மையங்களும் எட்டு தபால் நிலைய கடவுசீட்டு சேவை மையங்களும் செயல்பட்டு வருகிறது என்றார்.

2024 ஆண்டு மட்டும் மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகத்தில் 2,89,603 கடவுசீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 2,79,988 கடவுசீட்டு சேவைகள் வழங்கபட்டுள்ளன. என்றும்  மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகத்தில் 2,59,443 கடவுசீட்டுகளும், 20,545 காவல்துறை தடையின்மைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன. இவை முந்தைய வருடத்தை விட 14.033 கடவுசீட்டு சேவைகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். 2024 ஆண்டு மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலக்தின் கீழ் இயங்கும் தபால் நிலைய கடவுசீட்டு சேவை மையங்களில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு தேவகோட்டை, இராமநாதபுரம் மற்றும் நாகர்கோவில் சேவை மையங்களில் கடவுசீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக கடவுசீட்டு விண்ணப்ப நேர்காணலுக்கான முன்பதிவு எண்ணிக்கை அதிகபடுத்தபட்டுள்ளது என்றார், ஏறத்தாள அனைத்து கடவுசீட்டு சேவை மையங்களிவும் அடுத்த வேலைதினத்தில் கடவுசீட்டு விண்ணப்ப நேர்காணலுக்கான முன்பதிவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளது என்றும் கூறினார்.

பொது மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக மக்கள் குறைதீர்ப்பு மையம் உருவாக்கப்பட்டு கடவுசீட்டு விண்ணப்பதாரர்களின் குறைகளை குறிப்பிட்ட நேரத்தில் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் மேல்கல்வி, வியாபாரம் தொழில் மற்றும் வேலைக்கு வெளிநாடு செல்லும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக பயன்பெறுகின்றனர். குழந்தைகள் கடவுசீட்டு பெறுவதை எளிதாக்குவதற்காக வெளியுறவுத்துறை அமைச்சாமானது கொண்டுவந்துள்ளது. கடவுசீட்டு விண்ணப்பதாரர்கள் அதனை சரியாக படித்து தேவையான ஆவணங்களை கடவுசீட்டு விண்ணப்பத்துடன் சமர்பிக்கும்போது குழந்தைகளுக்கு விரைவாக கடவுசீட்டு பெறமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், சாதாரண முறையில் கடவுசீட்டு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு மதுரை மண்டல கடவுசீட்டு அலுவலகம் காவல்துறையினருடன் இணைந்து சராசரியாக 11 தினங்களில் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த கால அவகாசத்தில் கடவுசீட்டு வழங்கபட்டு வருகின்றது என்றும் மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow