ராணிப்பேட்டை மாவட்டம் மாங்குப்பம் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் அருகில் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் மின் இணைப்பு கம்பங்கம் உள்ளன
இந்த கம்பத்தில் உள்ள மின் கம்பிகள் கை தொடும் அளவிற்கு தொங்கி ஆபத்தான நிலையில் உள்ளன இதனால் அங்கு செல்லும் பொதுமக்கள் ஆடு மாடுகள் மின் கம்பியை உரசி உயிர் சேதம் ஏற்படும் அவல நிலை உள்ளது இதனை சரி செய்து தர அங்குள்ள பொதுமக்கள் விஷாரம் மின் இணைப்பு அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்
பொதுமக்கள் நலன் கருத வேண்டிய மின்னிணைப்பு துறை அதிகாரிகள் இப்படி அலட்சியமாக இருப்பது கண்டிக்கத்தக்கது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மின் இணைப்பு கம்பிகளை சரி செய்து தர வேண்டும் என அக்கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் நடவடிக்கை எடுக்குமா மின்துறை நிர்வாகம்..?