நாடகம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா தலைமையில் முத்துக்கடையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முத்தமிழ் நாடக கலைஞர்கள் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகள் POCSO சட்டங்கள்,குழந்தைகளுக்கான உதவி எண் 1098 பெண்களுக்கான உதவி எண் 181 எடுத்துரைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் (CWC), துணைக் காவல் கண்காணிப்பாளர் வெங்கடகிருஷ்ணன் (IUCAW), காவல் ஆய்வாளர் பாரதி (CWC), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டனர்.