ராணிப்பேட்டை:
ஆற்காடு தாலுகா தாயனூர் இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயை கொண்டு வந்து குட்டையில் விட்டு விட்டனர். அப்பகுதியில் மக்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.
இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரிடமும், வாலாஜா சுகாதாரத் துறையிடமும் , ஆற்காடு பி டி ஓ, மற்றும் வாலாஜா வட்டாட்சியரிடமும் மனு கொடுத்து இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.