ராணிப்பேட்டை:
கலவை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 108-வது எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 -வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சொரையூர் குமார், தலைமையில் கூட்ரோட்டில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து, கூட்ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவிழா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கடந்த பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.
இதில் , ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், முனிசாமி, மற்றும் அதிமுக மாவட்ட நகர ஒன்றிய கிளைக் கழக வட்ட நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.