தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் மதுரை ரோட்டில் உள்ள ஜே.சி பெட்ரோல் பங்க் அருகில் பேங்க் ஆஃப் இந்தியா புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்கு ராஜபாளையம் நாச்சியார் குழுமத்தின் நிறுவனர் ஆறுமுகப் பெருமாள் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார். பெரியகுளம் கிளை மேலாளர் ராஜசேகர் வரவேற்று பேசினார். மதுரை மண்டல மேலாளர் கிஷோர் குமார்,மதுரை மண்டல துணை மேலாளர் ஸ்ரீ ஹர்ஷாய் எம் ஜாய்ஸ், பேங்க் ஆஃப் இந்தியா அதிகாரிகள் நல சங்க தலைவர் மணிவண்ணன்,தொழிலாளர் நல சங்க பொறுப்பாளர் தாமோதரன்,பணியாளர்கள் நல சங்க பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன்,மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பூமிநாதன்,நெல்லையப்பர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணி,பாப்புலர் கடை உரிமையாளர் வெங்கடேசன், ஜெகநாதன் திருக்கோவில் இஸ்கான் மற்றும் தொழிலதிபர்கள்,விவசாயிகள் உள்பட வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஜே சி குழுமம் நிறுவனத்தின் சார்பில் முதல் வாடிக்கையாளராக ஜெயபால் ரூபாய் ஒரு இலட்சம் வைப்பு நிதி கணக்கை செலுத்தி துவக்கி வைத்தார்.மேலும் வங்கியில் தங்க நகை கடன்,வீட்டுக் கடன்,வாகன கடன் திட்டம்,தனிநபர் கடன் போன்ற சேவைகளை பெரியகுளம் புதிய கிளை பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வழங்கப்படுகிறது, திறப்பு விழா நிகழ்ச்சியில் இறுதியாக வங்கியின் உதவி மேலாளர் விக்னேஷ் நன்றி உரை வழங்கினார்.