தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை கடைவீதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பரிவார தேவதைகள் ஜீர்ணோத்தாரணா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. பரம்பரை வைஸ்ய புரோகிதர் ராமநாதன் சாஸ்திரிகள் தலைமையில் காசி, வாரணாசி, நாசரேத், ராமேஸ்வரம்,சுருளி தீர்த்தம் உள்ளிட்ட 48 புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நன்னீரால் யாகசாலை பூஜை, மஹா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, கலா கர்ஷனம்,கோ பூஜை, பிரதிஷ்டை, பூர்ணாஹுதி, விமான கலச மஹா பூஜைகள் உள்பட ஆறு கால பூஜை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரம், தீபாராதனையுடன் மஹா அபிஷேகம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் கும்பாபிஷேக தலைவர் வெங்கட்ராமன்,கௌரவத் தலைவர் ராஜேந்திரன்,செயலாளர் மோகன்,பொருளாளர் கண்ணன், உப தலைவர்கள் சுப்பிரமணியன், சிவ ஸ்ரீ மோகன்,கண்ணன்,இணைச்செயலாளர் வெங்கட்டரமணன்,இணைப் பொருளாளர் நாகராஜன்,செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன்,ராஜசேகர்,உமா காந்தன்,வெங்கடேசன்,கணேசன்,ரவிச்சந்திரன், விஸ்வநாதன்,சீனிவாசன்,சுரேஷ் ,பாபு,சிவராமகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ய வைஸ்ய சபா, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் தேவஸ்தான கும்பாபிஷேக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கினர்.