தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி புதுப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட தலைவர் இராஜபாண்டி தனது குடும்பத்துடன் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி ஏற்றி திமுக அரசை கண்டித்து தனது இல்லத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். தமிழகத்திற்கு தண்ணீர் தராத கர்நாடகா முதலமைச்சர் தேனி மாவட்டம் விவசாயத்திற்கு முக்கியமாக இருக்கக்கூடிய முல்லைபெரியார் அணையில் 152 அடி நீர்தேக்கம் செய்ய விடாமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் நடந்துகொள்ளும் கேரளா முதலமைச்சர் ஆகியோர் தமிழகத்திற்கு வருகை தர இருக்கும் அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கண்டித்து தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை, இந்த திமுக அரசு தமிழ்நாட்டின் குடிகார அரசாக நடத்தி கொண்டிருக்கிறது.
தமிழக உரிமையை விட்டுக் கொடுக்ககூடாது என்று திமுக அரசை கண்டித்து பாஜக மாவட்ட தலைவர் இராஜபாண்டி தலைமையில் கோசங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியின் போது பாரதிய ஜனதா மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் மகளிர் அணியினர் பலர் கலந்துகொண்டனர்.