ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திட்ட பணிகள் ரூபாய் 52.10 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்...
திண்டுக்கல் மாவட்டம்
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி அக்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 250 வீட்டுமனை பட்டாக்கள், அக்கரைப்பட்டி, பாறைப்பட்டி, வீரக்கல் ஊராட்சிகளில் முடிவற்ற திட்ட பணிகள் ரூபாய் 52.10 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் அக்கரைப்பட்டி ஊராட்சி மல்லையாபுரம் பகுதியில் 250 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களையும், அக்கரைப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையினையும், பாறைப்பட்டி ஊராட்சியில் ரூபாய் 9.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையினையும், வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கும்மம்பட்டி அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூபாய் 34.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைக் கட்டிடங்கள் என மொத்தம் ரூபாய்-52.10 லட்சம் மதிப்பீட்டில் முடிவற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது...
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள் தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு எல்லோருக்கும் எல்லாம் என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் பகுதியை சுற்றியுள்ள ஊராட்சி பகுதிகளில் ரூபாய் 52.10 லட்சம் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. மேலும் இலவச வீட்டு மனை பட்டாக்களை பெற்ற பயனாளிகள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேரில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம் இலவச வீட்டு மனை பட்டாக்களை பெரும் பயனாளிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்ற விதிமுறை உள்ளது ஆகவே அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் வீடு கட்டவில்லை என்றால் அந்த இடத்தை அரசுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டும் இதனை கருத்தில் கொண்டு பயனாளிகள் கலைஞரின் கனவுகள் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம் எனக் கூறினார். இந்நிகழ்வில் உடன் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரணி, திண்டுக்கல் மாவட்ட துணை பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) கார்த்திகேயன், ஆத்தூர் வட்டாட்சியர் முத்து முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், பத்மாவதி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், ஆத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், ஊராட்சி செயலர்கள் வேல்முருகன், பாலாஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் காங்கேயன், மாவட்ட ஒன்றிய பேரூர் கிளைக் கழக திமுக நிர்வாகிகள் , துறை சார்ந்த அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0