கோவையில் முதன்முறையாக இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா, சுமார், 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டங்கள் வழங்கி பெருமை படுத்த பட்டது...
கோவை
இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் சார்பில் சமீபத்தில் பட்டயக் கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, கோவையில் முதன்முறையாக இந்த பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் சுமார் 110 புதிய பட்டயக் கணக்காளர்களுக்கு பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வரவேற்புரையாற்றிய இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன், பட்டயக் கணக்காளர் படிப்பிற்கான வரவேற்பும் தேவையும் அதிகரித்து வருவதாகவும், ஆர்ட்டிகல்ஷிப் எனப்படும் நடைமுறைப் பயிற்சி திறமையான தொழில்முறை நிபுணர்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், புதிதாக தகுதி பெற்ற பட்டயக் கணக்காளர்களுக்கான கேம்பஸ் பிளேஸ்மென்ட் வாய்ப்புகளும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய சிஏ ஜி. ராமசாமி, இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் அகில இந்திய முன்னாள் தலைவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை பட்டயக் கணக்காளர் தொழிலில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி வருவதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் பல்வேறு தொழில் துறைகள், நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு அமைப்புகளில் திறமையான பட்டயக் கணக்காளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிராந்திய கவுன்சில் உறுப்பினர்கள் ராஜேஷ், அருண், மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் கோவை கிளையின் தலைவர் சுர்வஜித் எஸ் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0