ஆத்தூர் சித்தையன் கோட்டை பெரிய பள்ளிவாசலில் அனைத்து மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி...

திண்டுக்கல் மாவட்டம்

Mar 12, 2026 - 16:52
 0  5
ஆத்தூர் சித்தையன் கோட்டை பெரிய பள்ளிவாசலில் அனைத்து மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி...

ஆத்தூர் சித்தையன் கோட்டை பெரிய பள்ளிவாசலில் அனைத்து மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். ஆத்தூர் தொகுதியில் உள்ள இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன் என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், சித்தையன் கோட்டை பெரிய பள்ளிவாசலில் அனைத்து மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முத்தவல்லி கே.எஸ்.உதுமான்அலி, எம்.சேக்தாவுது, கே.பி.செல்ல மரைக்காயர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசுகையில்... 

அனைத்து சமுதாய மக்களும் இந்த நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் (இஃப்தார்) கலந்து கொண்டிருப்பது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமையாக உள்ளது. காரணம் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை ஆத்தூர் தொகுதியில் எனக்கு ஆதரவு அளித்து வரும் இஸ்லாமிய சமுதாய மக்களில் சித்தையன் கோட்டையில் வசிக்கும் இஸ்லாமிய சமுதாய மக்கள் காட்டும் அன்பு அளவில்லாதது.  எந்தவொரு கோரிக்கையாக இருந்தாலும் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் கேட்பார்கள். உடனே நான் செய்து கொடுத்துள்ளேன். இப்பகுதி விவசாயிகள் நலன் கருதி சாலை வசதி, பாலம் வசதி, நீர்வரத்து வாய்க்கால் வசதி போன்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். உடன்
இந்நிகழ்ச்சியில் சித்தையன் கோட்டை பேரூராட்சி மன்ற தலைவர் போதும்பொண்ணு முரளி, பேரூர் கழக செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் அலாப்தீன், வார்டு உறுப்பினர்கள் தியாகு, லாவண்யா சுரேஷ், மாவட்ட சிறுபான்மையினர் அணியினைச் சேர்ந்த ரபீக் மைதீன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜாஹிர்உசேன், வார்டு செயலாளர் சையது அல்டாப், ஆத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பளார் ஏ.முகமது ரபீக், நகர துணைச் செயலாளர் ஏ.அலாவுதீன், திமுக நிர்வாகிகள் செல்லம், தாசில், ஹக்கிம்சேட், செங்கிஸ்கான், ஜெய்லாணி, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் பைசூர் ரகுமான், அங்குசாமி, அப்துல் ரகுமான் மற்றும் ஜமாத்தார்கள், சித்தையன்கோட்டை பேரூராட்சி பகுதி ஊர் பொதுமக்கள் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0