கண்ணன் மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்...

புதுக்கோட்டை

Mar 31, 2026 - 15:46
Mar 31, 2026 - 16:42
 0  4
கண்ணன் மருத்துவமனை மற்றும்  ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்...
கண்ணன் மருத்துவமனை மற்றும்  ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம்...

திருவப்பூர் கண்ணன் மருத்துவமனை மற்றும் திருச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனை, டெல்டா கேன்சர் பவுண்டேஷன் மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்  திருவப்பூரில் உள்ள கண்ணன் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இந்தச் சிறப்பு முகாமினை ரோட்டரி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் Rtn. G. அந்தோணிசாமி மற்றும் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn. S. சரவணன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தனர். கண்ணன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் Dr. K. முத்துகிருஷ்ணன் அவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.
இந்த முகாமில் திருச்சி ஸ்ரீ ராமகிருஷ்ணா சிறப்பு மருத்துவமனையின் பிரபல இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் Dr. M.S. விஜய் ஆனந்த் (M.S., M.Ch - Gastro)  கலந்துகொண்டு நோயாளிகளுக்குச் சிறப்பு ஆலோசனைகளை வழங்கினார்.
முகாமில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள்:
 வயிறு, கல்லீரல், குடல் மற்றும் கணைய புற்றுநோய் பரிசோதனைகள்.
 தீராத வயிற்று வலி மற்றும் ஜீரண மண்டல உபாதைகள்.
 குடல் புண், குடலிறக்கம் மற்றும் பித்தப்பை கற்கள் தொடர்பான ஆலோசனைகள்.
 மஞ்சள் காமாலை, மூலம் மற்றும் பௌத்திரம் தொடர்பான சிகிச்சைகள்.
முகாமிற்கு வருகை தந்தவர்களில் தேவையான நோயாளிகளுக்கு எண்டோஸ்கோபி (Endoscopy) பரிசோதனை முற்றிலும் இலவசமாக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு, இரத்த அழுத்தம் மற்றும் அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொண்டு பயனடைந்தனர்.
ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் இந்த முகாமிற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த முகாமின் மூலமாக பல்வேறு இதன் மூலம் பயனாளர்கள் பயன் அடைந்ததாகவும் இதற்கு மக்கள் நன்றினை தெரிவித்துள்ளார்கள். இதனை போன்று பல்வேறு இலவச மருத்துவ முகாம்கள்  நடத்துமாறும் மக்கள் கோரிக்கை என்று தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0