கும்பகோணத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

கும்பகோணம்

Apr 3, 2026 - 13:44
 0  15
கும்பகோணத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...

கும்பகோணத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் 4 வது முறையாக போட்டியிடும் வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை குறித்து பேசினார். கும்பகோணத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல்களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி திமுக சார்பில் நான்காவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் சாக்கோட்டை அன்பழகன், ரயில் நிலையம் அருகில் இளங்கா நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து கடந்த முறை போட்டியிட்ட போது திமுக ஆட்சிக்கு வந்தால் மாநகரம் முழுவதும் உள்ள குண்டு குழியமான சாலைகள் சீரமைத்து தரப்படும் என்று தெரிவித்தேன் அதன் பெயரில் அனைத்து தெருக்களிலும் ,சந்து பொந்து  இடைகளிலும்  தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கோவில்கள் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கும்பேஸ்வரம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று  மொட்ட கோபுரத்தில் ஐந்து அடுக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படும். குறிப்பாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 8000 மதிப்புள்ள கூப்பன்கள் வழங்கப்படும் அந்த கூப்பன் வைத்து நீங்கள் எந்த பொருட்கள் வேண்டுமென்றாலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்து தனது பிரச்சார பயணத்தை தொடங்கினார். இதில் சட்ட திட்ட குழு தலைவர் கல்யாண சுந்தரம், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0