திமுக அரசைத் தூக்கியெறியவே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது- பழனியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேட்டி.

பழனி

Apr 25, 2026 - 15:37
 0  9
திமுக அரசைத் தூக்கியெறியவே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது- பழனியில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் பேட்டி.

திராவிட மாடல் 2.0' குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்குப் பதிலளித்த அவர், அது வெறும் 'ஜீரோ' தான் என்றும், திமுக அரசைத் தூக்கியெறியவே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் எனவும் பேட்டி​ தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மத்திய இணையமைச்சரும் அவிநாசி சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகன் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
​இந்தியத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்துள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "நாடு முழுவதும் தேர்தல் ஆணையம் ஜனநாயக முறையில் தேர்தலைச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. தோல்வி பயத்தின் காரணமாகவே எதிர்க்கட்சிகள் இதுபோன்ற காரணங்களைத் தேடிப் பிடித்துச் செயல்படுகின்றனர்" என கூறினார்.
​அவிநாசி தொகுதி நிலவரம் குறித்துக் கூறுகையில், "அவிநாசியில் 100 சதவீத வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கிறோம். எங்களது வெற்றி தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" எனத் தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.
​தமிழகத்தில் பதிவான அதிகப்பட்ச வாக்கு சதவீதம் குறித்துப் பேசிய அவர், "அதிகரித்துள்ள வாக்கு சதவீதம் திமுக அரசின் மீதான மக்களின் கோபத்தையும், ஆதங்கத்தையும் காட்டுகிறது. மக்கள் திமுக அரசு மீது வெறியாக இருந்ததால்தான் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இது முழுக்க முழுக்க திமுக அரசாங்கத்திற்கு எதிரான வாக்குப்பதிவு" என  குறிப்பிட்டார்.
​செல்வப்பெருந்தகை வீட்டின் வருமான வரிச் சோதனை குறித்து அவரும் அத்துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், பாஜக-வின் மீதான மக்களின் நம்பிக்கையால்தான் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பாஜக-வை நோக்கி வருகின்றனர் என்றார். மேலும், 'திராவிட மாடல் 2.0' குறித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்துக்குப் பதிலளித்த அவர், அது வெறும் 'ஜீரோ' தான் என்றும், திமுக அரசைத் தூக்கியெறியவே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் என்றும் கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0