தஞ்சை பூதலூர் தாலுகாவில் தொடரும் அலட்சியம்: சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் வலுவிழந்த பாலங்களால் உயிர் பலி அபாயம் – பொதுமக்கள் கடும் கண்டனம்!

தஞ்சை

Mar 11, 2026 - 17:19
Mar 11, 2026 - 17:26
 0  17
தஞ்சை பூதலூர் தாலுகாவில் தொடரும் அலட்சியம்: சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் வலுவிழந்த பாலங்களால் உயிர் பலி அபாயம் – பொதுமக்கள் கடும் கண்டனம்!
தஞ்சை பூதலூர் தாலுகாவில் தொடரும் அலட்சியம்: சாய்ந்த மின்கம்பங்கள் மற்றும் வலுவிழந்த பாலங்களால் உயிர் பலி அபாயம் – பொதுமக்கள் கடும் கண்டனம்!

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுகாவிற்குட்பட்ட அயனாவரம் கிராமம் முதல் தொண்டராயன்பட்டி கிராமம் வரையிலான பகுதிகளில், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மின்கம்பங்கள் மற்றும் பாலங்கள் மிக மோசமான நிலையில் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது
அயனாவரம் - தொண்டராயன்பட்டி இடையே செல்லும் மின் பாதையில் உள்ள மின்கம்பங்கள் பல இடங்களில் பழுதடைந்தும், ஆபத்தான முறையில் சாய்ந்தும் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இதே பகுதியில் மின்கம்பம் சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார் அதன் பின்பு புதிய மின்கம்பம் நடப்பட்டது அந்த  மின்கம்பமானது மீண்டும்  பழுதடைந்து சாய்ந்த நிலையில் கீழே விழுவது போல் இருக்கிறது இதனை பொதுமக்கள் புகார் அளித்தும் தற்போது வரை மின்வாரியம் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலுவிழந்த பாலங்கள் இந்த இரண்டு கிராமங்களை இணைக்கும் பகுதிகளில் உள்ள பாலங்கள் போதிய பராமரிப்பு இன்றி பாலத்தில் சுவர்களும், கைப்பிடிகளும்  விரிசல் விட்டு வலுவிழந்து காணப்படுகின்றன. நடந்து செல்லும் மக்கள், கனரக வாகனங்கள் மட்டுமன்றி, இருசக்கர வாகனங்களில் செல்லும் மக்களும் எப்போது விபத்து நேருமோ என்ற அச்சத்திலேயே இப்பாதையைக் கடந்து செல்கின்றனர்.இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பலமுறை மின்வாரியத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நேரில் முறையிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் "சரி செய்து விடுகிறோம்" என்று வாய்மொழியாகக் கூறிவிட்டு, இதுவரை எந்தவொரு களப்பணியையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மற்றும் உறுதியான மின்கம்பங்களை நட வேண்டும்.
 நெடுஞ்சாலைத் துறை: பலவீனமாக உள்ள பாலங்களை ஆய்வு செய்து, அவற்றை உடனடியாகச் சீரமைக்கவோ அல்லது புதிய பாலங்கள் கட்டவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழப்புகள் ஏற்படும் முன், அரசு அதிகாரிகள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இந்தப் பகுதியில் பிரச்சனை அறிந்து நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் .
இனியும் காலம் தாழ்த்தினால், உயிரிழப்புகள் மற்றும் விபத்துகளுக்கு அதிகாரிகளே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என அயனாவரம் மற்றும் தொண்டராயன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 4
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0