தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கில் மாட்லாடி வாக்கு சேகரித்த ஶ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன்...

Apr 5, 2026 - 17:00
Apr 5, 2026 - 17:00
 0  22
தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கில் மாட்லாடி வாக்கு சேகரித்த ஶ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன்...
தெலுங்கு பேசும் மக்களிடம் தெலுங்கில் மாட்லாடி வாக்கு சேகரித்த ஶ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன்...

மணப்பாறை பகுதியில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.

திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் ஆர்.மனோகரன்  மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேட்டுப்பட்டியில் தொடங்கி கலிங்கப்பட்டி, கத்திக்காரன்பட்டி, சமுத்திரம், சித்தகுடிப்பட்டி, காந்திநகர், மரவனூர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வேட்பாளருக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது தெலுங்கு பேசும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் சமுத்திரம், மருள்நாயக்கன்பட்டி, தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் மனோகரன், தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்தார். மேலும் அதிமுக ஆட்சியில்தான் எஸ்டி ஜாதி சான்றிதழ் பெற்றுத்தந்தோம், அதன்மூலம் பலரும் இன்று அரசு பதவிகளில் உள்ளனர் என்றார். மேலும் ஜெயலலிதாவின் தொகுதியான் ஶ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு அதிக வாக்குகளை தாருங்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சிறப்பான திட்டங்கள் நிறைவேற்றப்படும். என்மேல் நம்பிக்கை வைத்தால் நிச்சயமாக செய்து தருவேன். மக்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டுவருவேன்‌. என்றார். சமுத்திரம் கிராமத்தில் பிரச்சாரத்திற்குச் சென்ற வேட்பாளர் டீக்கடையில் அமர்ந்து கட்சியினருடன் சேர்ந்து டீ குடித்துக் கொண்டே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பிற்கு வந்த வேட்பாளரைக்கான வந்திருந்த சிறுவர்களுடன் பேசிய வேட்பாளர் அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியடைந்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0