மணப்பாறையில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல்சமது, பள்ளிக் கல்வி துறை அமைச்சருடன் சென்று வேட்புமனு தாக்கல்.
மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணிக்கட்சியின் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல்சமது , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசித்ரகலாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து வேட்பாளர் அப்துல்சமது தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்துல்சமது, கடந்த ஐந்து ஆண்டுகால சிறப்பான திராவிட மாடல் ஆட்சியின் சாதனை மிகப்பெரிய வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம். கடந்த முறையை விட இந்த முறை சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். மணப்பாறை தொகுதியில் இன்னும் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம். தொடர் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இந்த அரசு தொடரும். எளிதாக தொடர்பு கொள்ளக்கூடிய சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். மக்கள் கோரிக்கை நிறைவேற்றிக் தந்திருக்கிறேன். திருப்திகரமான சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டிருக்கிறேன். அதிக நாட்கள் தொகுதியில் இருந்து பணியாற்றுவேன்,என்று கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0