விவேகானந்தர் இளைஞர் பேரவை 20-ஆம் ஆண்டு அறப்பணி:

Mar 28, 2026 - 15:24
 0  19
விவேகானந்தர் இளைஞர் பேரவை 20-ஆம் ஆண்டு அறப்பணி:
விவேகானந்தர் இளைஞர் பேரவை 20-ஆம் ஆண்டு அறப்பணி:
விவேகானந்தர் இளைஞர் பேரவை 20-ஆம் ஆண்டு அறப்பணி:


தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தலைத் திறந்தது தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை!
திருச்சிராப்பள்ளி (பீமநகர்)
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாரின் வாக்கிற்கும், அனைத்து உயிர்களையும் சமமாக நேசித்த ராமபிரானின் தர்மத்திற்கும் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு வீர விவேகானந்தர் இளைஞர் பேரவை தனது 20-ஆம் ஆண்டு கோடைக்கால அறப்பணியைத் தொடங்கியுள்ளது.
ராம அவதாரத்தில் மனிதர்கள் மட்டுமன்றி குரங்கு, கரடி, மரம், செடி, கொடி என இயற்கையின் அனைத்துப் படைப்புகளையும் ராமபிரான் நேசித்தார். அந்த உன்னத நோக்கத்தின் அடிப்படையில், இப்பேரவை சார்பில் கோடை வெப்பத்தைத் தணிக்கப் பொதுமக்களுக்கு நீர் மோர், பானகம் மற்றும் புத்துணர்ச்சி தரும் பழங்கள் வழங்கப்பட்டன.
விலங்குகளுக்குத் தனி கவனம்:
இந்த ஆண்டின் கூடுதல் சிறப்பாக, மனிதர்களுக்கு இணையாக வாயில்லா ஜீவன்களின் தாகத்தைப் போக்கவும் பேரவை களம் இறங்கியுள்ளது. பொதுவெளிகளில் ஆங்காங்கே விலங்குகளுக்காகத் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அவற்றைப் பராமரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பறவைகளுக்காக வீடுகளில் நீர் வைக்க உதவும் சிறிய அளவிலான நீர் சேகரிப்பு உபகரணங்களும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பேரவையின் நிர்வாகிகள் R. ரமேஷ், T. சித்தார்த்தன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர். நிறைவாக தினேஷ் நன்றியுரை ஆற்றினார். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டு பேரவையின் இந்த நற்பணிகளை பாராட்டியும் ஆதரித்தும், நன்றியையும் வாழ்த்துக்களையும் இதில் மூலம் பல்வேறு பல்வேறு பேர் பயன் அடைகிறார்கள் அதனால் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற தகவலை  பொதுமக்கள் கூறியுள்ளனர்

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 2
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0