வெற்றி நிச்சயம் மெக்கானிக் குடும்பத்தின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா...
வெற்றி நிச்சயம் மெக்கானிக் குடும்பத்தின் மூன்றாம் ஆண்டு துவக்கவிழா மூணாரில் உள்ள தனியார் விடுதியில் மிகச் சிறப்பாக இரண்டு நாட்கள் நடைபெற்றது , இவ்விழாவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள வெற்றி நிச்சயம் மெக்கானிக் குடும்பத்தின் உறவுகள் வந்திருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் தற்போது உள்ள டிஜிட்டல் கால சூழ்நிலையில் நாம் எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் , எந்த நுணுக்கத்தில் வாகனங்களில் உள்ள பழுதுகளை நீக்கி கொடுக்க வேண்டும் என்பது மட்டுமின்றி இருசக்கர பழுது நீக்கி கொடுப்பவர்களின் முன்னேற்றத்திற்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பற்றிய செய்திகளை வெற்றி நிச்சயம் மெக்கானிக் குடும்பத்திலுள்ள அனுபவமிக்க பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்களால் மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்ட கையேடு அறிமுகப்படுத்தப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை குணா , திருச்சி சிங்காரவேலன் , அரசூர் சிவா , மதுரை சாய்சரவணன் , திண்டுக்கல் செல்வஆரோக்கியம் , வையம்பட்டி செந்தில்குமார் , எரியோடு தண்டபாணி , மயிலை அன்பு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இரண்டு நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் அசைவ உணவு வகைகள் , தேனீர் மற்றும் போக்குவரத்து வசதிகளையும் மிகச்சரியாக செய்திருந்தனர். முடிவில் மயிலை ஆனந்த் நன்றி தெரிவிக்க விழா இனிதே நிறைவுற்றது.
இருசக்கர வாகன பழுது பார்ப்பவர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தாலும் ஒரு குடும்பமாக ஒன்றிணைந்து ஒவ்வொரு வருடமும் நிகழ்வினை நடத்துவது மட்டுமன்றி ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப நிகழ்வுகளில் பாரபட்சமில்லாமல் கலந்து கொள்ளும் வெற்றி நிச்சயம் மெக்கானிக் குடும்பத்தின் நட்புகளை பற்றி அறிந்து பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0