வெற்றித் தமிழர் முன்னேற்ற கழக பொதுக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் ஜி.இராதாகிருஷ்ணன் எழுச்சி உரை....
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் வெற்றித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு வெற்றித் தமிழர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜி.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கட்சியின் வளர்ச்சி குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் சரவணன் வரவேற்புரை ஆற்றினார்.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் மக்கள் கட்சி தலைவர் விஷ்ணு முருகேசன், மருதம் மக்கள் கழகம் தலைவர் கனகராஜ், திராவிடர் கழகம் ராமலிங்கம், தோட்டனூத்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராஇராதாகிருஷ்ணன், வளரும் தமிழகம் கட்சி தலைவர் பெரியசாமி, வாழைக்காய்பட்டி மூர்த்தி, அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். இதில் மாநிலச் செயலாளர் டாக்டர். எஸ்.லலிதா, மாநில பொருளாளர் இசக்கிமுத்து, மாவட்ட தலைவர் பிரபாகரன், மாவட்ட செயலாளர் ஜோதி, மாவட்ட பொருளாளர் சிரில் ராகுல் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0