உடைந்த கோப்பு பாலத்தை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருச்சி மாவட்டம்

Mar 12, 2026 - 10:04
 0  15
உடைந்த கோப்பு பாலத்தை சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோப்பு - முக்கொம்பு சாலையில் உடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்டித் தரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி:
அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், குழுமணி வழியாக முக்கொம்பு செல்லும் சாலையில் உய்யக்கொண்டான் புலிவலம் மணற்போக்கி வடிகால் அருகே இருந்த பாலம், கடந்த 13-01-2026 அன்று அதிகாலை 4 மணி அளவில் உடைந்து விழுந்தது. இதனால் அந்த வழியாகச் செல்லும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாலம் உடைந்ததால், இப்பகுதி மக்கள் சுமார் 7 கி.மீ தூரம் ஜீயபுரம் வழியாகச் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
 தற்போது அறுவடைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வாழை மற்றும் சவுக்கு பாரம் ஏற்றிய லாரிகள் செல்ல வழியில்லாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
  நாள்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் செல்லும் முக்கிய சாலையாக இது இருந்ததால், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:தற்போது தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர்கள் செல்லும் வகையில் ஒரு தற்காலிகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. எனவே, உடைந்த பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு, போர்க்கால அடிப்படையில் புதிய பாலம் கட்டித் தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை அளித்துள்ளனர் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா என்று  காத்திருந்து  பார்க்கலாம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0