மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி; முகவரி குறித்து விசாரணை

Jun 18, 2026 - 08:04
 22
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் பலி; முகவரி குறித்து விசாரணை

திருச்சி உறையூர் பகுதியில் மயக்க நிலையில் மீட்கப்பட்ட சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து உறையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த 12.06.2026 அன்று மதியம் 12.20 மணியளவில் உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் (Primary Health Centre) முன்பு அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் மயக்க நிலையில் படுத்திருந்தார். இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த அவர், (17.06.2026) மதியம் 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் உறையூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது.இதையடுத்து உறையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த நபரின் பெயர், முகவரி மற்றும் உறவினர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நபரின் அடையாளங்கள்.

 வயது – சுமார் 70

 உயரம் – சுமார் 5½ அடி

 நிறம் – மாநிறம்

மீசை, தாடி – வெள்ளை நிறம்

தலைமுடி – கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறம்

 உடை – வெள்ளை வேஷ்டி

தனிப்பட்ட அடையாளங்கள்.

1. மார்பின் நடுப்பகுதியில் புள்ளி மச்சம்

2. வலது மார்புப் பகுதியில் புள்ளி மச்சம்

இந்த நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அவருடைய உறவினர்கள் உடனடியாக உறையூர் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புக்கு:

காவல் ஆய்வாளர் – 9498196067, 9994655637

உறையூர் காவல் நிலையம் – 9498100631